Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் அமல்…. ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

பெரும்பாலான டிஜிட்டல் கட்டண முறைகள் வந்தபோதிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் தேவை இன்னும் இருக்கிறது. ஒரு சில இடங்களில் பணம் கொடுத்துதான் பொருட்களை வாங்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் இனி தேவைப்படும் போதெல்லாம் அல்லது விருப்பப்படும்போது எல்லாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது. ஏனென்றால் ஏடிஎம்மில் பணம் எடுக்க இனிமேல் வங்கிகளால் கூடுதலான கட்டணம் வசூல் செய்யப்படும். ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் ஏடிஎம் பயன்படுத்த முடியும், அதை மீறி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஜனவரி 1, 2002 முதல் அமல்படுத்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடரப்பட இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களும், ஏடிஎம் உபயோகிக்கும் அனைவருக்கும் ஜனவரி 1 2002 முதல் இந்த விதி பொருந்தும். ஒருவர் கட்டணம் இல்லாமல் ஏடிஎம்மை எவ்வளவு முறை பயன்படுத்தலாம் என்ற எந்த வரைமுறையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது”. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பின்படி ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த 5 இலவச பரிவர்த்தனை எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியின் ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனிடையில் ஏடிஎம்மில் ரொக்கமாக பணம் எடுத்தாலும் அதில் பணம் இல்லாத பரிவர்த்தனைகள் செய்தாலும், 5 பரிவர்த்தனைகள் வரை தான் இலவசம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
உதாரணமாக, மினி ஸ்டேட்மென்ட் பிரிண்ட் செய்வது அல்லது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி வேறு நபருக்கு பணம் அனுப்புவது போன்ற பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும். இதனை தவிர்த்து மெட்ரோ நகரங்களில், வங்கிக் கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் ஏடிஎம் அல்லாத வேறு வங்கிகளில் மாதம் 3 முறை இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் மற்றும் மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் மாதம் 5 முறை பரிவர்த்தனைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.
இதை மீறும் நபர்கள் கணக்கில் ஒரு பரிவர்த்தனைக்கு 21 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும். ஏற்கனவே இருக்கும் ஏடிஎம் விதிகளின் வரம்பின்படி ஒரு பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
கேஷ் ரீசைக்ளர் மிஷின்களிலும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று சென்ட்ரல் வங்கி தெரிவித்து உள்ளது. வரம்பு மீறும் பரிவர்த்தனைகளுக்கு வரிகள் இல்லாமல் ரூ.21 வசூல் செய்யப்படும். ரிசர்வ் வங்கி நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் இதைப் பற்றிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த வகையில் HDFC மற்றும் ஆக்சிஸ் வங்கி தங்களின் வலைதளங்களில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறு மேலேயுள்ள வரையறையை மீறி ஏடிஎம் பயன்படுத்துபவர்களுக்கு ஏடிஎம்மின் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் ரூ. 21+வரிகள் வசூல் செய்யப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

Categories

Tech |