Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு விடுத்த கோரிக்கை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. பார்வையிட்ட எம்.எல்.ஏ….!!

காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 40 கடைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் கடையின் மேற்கூரையானது இடிந்து கீழே விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், மாரிமுத்து எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது விரைவில் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. மாரிமுத்து கடை வைத்திருப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |