Categories
மாநில செய்திகள்

நந்தா தாத்தா நீங்க வேற லெவல்….. காலை முதல் மாலை வரை….. “75 ஆண்டு கால சாதனை” குவியும் பாராட்டு….!!

ஒடிசாவை சேர்ந்து வரும் முதியவர் நந்தா 75 ஆண்டுகளாக செய்துவரும் சேவை சமூக ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. 

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நம் குழந்தைகளுக்கு பெரிய அளவில் செல்வத்தை நாம் சேர்த்து வைப்பதை விட, நல்ல கல்வியை அவர்களுக்கு கொடுத்து சென்றால், அது அவர்களது வாழ்வை வளமாக்கும். இதை உணர்ந்த ஒடிசாவை சேர்ந்த நந்தா என்ற முதியவர் 75 ஆண்டுகளாக கட்டணம் எதுவும் வசூலிக்காமல்  அவரது  கிராம  மக்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

தினமும் காலை முதல் மாலை வரை மரத்தடியில் அமர்ந்து இயற்கையோடு இணைந்து இந்த பணியை விருப்பமுடன் செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் தன் கிராமத்தில் நிறைய பேருக்கு படிப்பறிவு இல்லாததால், பெரியவர்களுக்கும் படம் எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த சேவைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |