Categories
மாநில செய்திகள்

கல்வி வணிகமாயிடுச்சு…! எல்லாம் தகுதி இல்லாதவர்கள்… ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுங்க… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

B.E (Architecture) படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது கட்டாயம் என Architecture கவுன்சில் கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சியை வற்புறுத்தியதால், Architecture கவுன்சில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டாவை வற்புறுத்த தேவையில்லை என்றும்,

ஜே.இ.இ உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் B.E (Architecture) சேர்க்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2017 – 2018 ஆம் கல்வியாண்டில் B.E (Architecture) மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்புகளில் நாட்டா தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஜே.இ.இ தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 மதிப்பெண்கள் எடுத்த அம்ருதா என்ற மாணவி B.E (Architecture) படிப்பிற்கு, அவர் அளித்த விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாட்டா  தேர்வு கட்டாயம் இல்லை என்ற பிறகும் விண்ணப்பத்தை நிராகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது.ஆனால் 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன்,

நாட்டா தேவையில்லை என்று 2017 ஆம் ஆண்டு  Architecture கவுன்சில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில்,  நாட்டாத் தகுதி தேர்வு அவசியமென ஜூன் 25ஆம் தேதி மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பை வெளியிட்டது  Architecture  கவுன்சில் உத்தரவை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிடுள்ளார். Architecture கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டாலும் கூட, நாட்டா கட்டாயம் என்ற அறிவிப்புக்கு, 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடைவித்துள்ளதையும், ஜே.இ.இ  உள்ளிட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு உத்தரவாதத்தையும் சுட்டி காட்டியுள்ளார்.

ஆனால் நாட்டா தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும்,  ஒரு லட்சம் ரூபாய் வழக்கு தொகையாக, நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால் நம்  இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பதை  வழக்கு படம் பிடித்து காட்டுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கல்வி என்பது வாழ்வாதாரத்துக்கான தேவையை,  தகுதியை வழங்குவதற்கு மட்டுமல்ல எனவும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் தான் என குறிப்பிட்ட நீதிபதி, சமீப நாட்களில் கல்வியை வணிகமயமாக்குவது மட்டுமல்லாமல்  தகுதி இல்லாதவர்கள் கைகளிலும், அறிவுசார் ஆணவக்காரர்கள் கையிலிலும் கல்வி விழுந்துவிட்டதாக நீதிபதி தீர்ப்பில் தனது வேதனை குறிப்பிட்டிருக்கிறார். பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் இந்த ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால் மாணவர்களின் வாழ்க்கை வீணாகவதாகும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |