Categories
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல்… புதிய வடிவத்தில் பாடங்கள்…!!

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில், பாடவாரியாக ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான பாடங்கள் மீண்டும் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான வகுப்புகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் ஆசிரியர்கள் மட்டுமே பாடம் எடுத்து வந்த நிலையில், தற்போது மாணவர்களும் பதில் கூறும் முறையும் இடம்பெற்றிருக்கிறது. சரியான பதிலை சொல்லும் மாணவர்களின் பெயர்கள் மறுநாள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.  இதுவரை தமிழ் மொழியில் பாடங்கள் ஒளிபரப்பப்பட்ட வந்த நிலையில், இன்று முதல் ஆங்கில மொழியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |