Categories
தேசிய செய்திகள்

கல்வியாளர்கள் யூஸ் பன்றாங்க… டிக்டாக் நிர்வாகம் சொன்ன விளக்கம்..கலாய்க்கும் இணைய வாசிகள்

கல்வியாளர்கள் டிக்டாக் மூலம் பாடம் நடத்த பயன்படுத்துகின்றனர் – டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிக்டாக் உள்ளிட்ட 59 அலைபேசி செயலிகளை இந்திய அரசு நேற்று தடை விதித்தது.  இதையடுத்து கூகுள் மற்றும் ஆப்பில் பிளே ஸ்டோர்களில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த அதன் பயனாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் நிகில் காந்தி இந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பயனாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதாகவும் இந்த தகவல்கள் சீன அரசுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டிக் டோக் 14 இந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களைக் கொண்டு  ஜனநாயக ரீதியாக செயல்படுவதாகவும் இதனை கலைஞர்கள், கதை சொல்லிகள், வாழ்வாதாரத்தை எதிர்நோக்குவோர், கல்வியாளர்கள் என லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி பலனடைந்திருப்பதாகவும், அவர்களில் பலர் முதல் முறையாக இணைய பயனர்கள். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நிகில் காந்தியின் இந்த பதிவை கண்டு இணையவாசிகள்  சிரித்து வருகின்றனர். பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் எப்படி? கல்வி கற்பித்தலுக்கு,  எந்த வகையில் உதவியது என அவர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Categories

Tech |