சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணவிழாவில் வெட்டப்பட்ட கேக்குகளிலுள்ள 794 கிராம் எடையுடைய ஒரு கேக் துண்டு தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் 5 அடி உயரம் மற்றும் 102 கிலோ எடை கொண்ட 5 அடுக்கு கேக் வெட்டப்பட்டதிலிருந்து தற்போது 794 கிராம் எடையுடைய ஒரு கேக் துண்டு ஏலத்திற்கு வரவுள்ளது.
இந்த கேக் துண்டில் ஒரு வெள்ளி குதிரை லாடம், வெள்ளை அலங்கார ஐசிங் மற்றும் நீலம், சிவப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் கோட் ஆஃ ஆம்ஸ் போன்றவை உள்ளது. இதற்கிடையே கடந்த 2008ஆம் ஆண்டு இந்த கேக் துண்டை வேறு ஒருவர் ஏலத்தில் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஏலத்திற்கு வரவுள்ள இந்த கேக் துண்டு சுமார் 200 முதல் 300 பவுண்டுகள் வரை ஏலத்தில் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.