ஈமு கோழி நிறுவன மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூரில் ஏசியன் ஈமு ஃபார்ம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்பட்டது. இந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனை நம்பி சுமார் 45 பேர் தலா 65 லட்சம் வரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும் கொடுக்காமல் முதலீட்டையும் கொடுக்காமல் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து செங்காளியப்பன் என்பவர் மாவட்ட பொருளாதார குற்றவியல் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏசியன் நிறுவனத்தின் இயக்குனர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கும் தலா 19 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.