முதற்கட்டமாக 60 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கடந்த 5-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ஆனால் தனியார் பேருந்துகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்துகளில் 50% பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் இயக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் தற்போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத பயணிகளுடன் 60 தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.