Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…!! 4,70,00,000 வருசத்துக்கு முன்னாடி மகரந்த சேர்க்கையில் ஈடுபட்ட ஈ… ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட ஈயின் தொல்லுயிர் படிமத்தை ஆராய்ச்சி செய்த போது பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஜெர்மனியில் உள்ள ஒரு குவாரியில் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஈயின் தொல்லுயிர் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை, ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா  பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் பிரட்ஞர் கிரிம்சன் என்பவர் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கண்டுபிடிக்கப்பட்ட ஈயின் தொல்லுயிர் படிமத்தில் வயிற்றுப்பகுதி சற்று வீங்கி இருக்கிறது. இதனை ஆய்வு செய்து பார்த்த போது, அதில் பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இருந்ததை கண்டு பிடிக்க முடிந்தது.

தேனீக்களும், பறவைகளும், சில பூச்சிகளும் தான் மகரந்தசேர்க்கையில்  ஈடுபடும். ஆனால் 4,70,00,000 ஆண்டுகளுக்கு முன்பே ஈக்களும் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டது தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது . இந்த ஈயின்  வயிற்றுப் பகுதியில் தடுத்த முடிகள் காணப்படுகிறது. இந்த தடித்த முடிகள்  மூலம் ஒரு பூவின் மகரந்தத்தை எடுத்து மற்றொரு பூ கொண்டு செல்ல முடியும். ஈக்கள் தான் பிற்காலத்தில் தேனீக்களாக மாற வாய்ப்பிருந்திருக்கும் ” என்று பிரட்ஞர் கிரிம்சன் கூறியுள்ளார்.

Categories

Tech |