முட்டையில் இருக்கக்கூடிய சில சிறப்பான விஷயங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அதிக அளவிலான சத்துக்களை உடலுக்கு தரக்கூடிய அதே சமயம் விலையும் குறைவாக உள்ள உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் நாட்டு முட்டையை உடைத்து குடிப்பது உடலுக்கு வலுவூட்டும். முட்டையில் புரதம் உள்ளது. இதில்,
உள்ள வைட்டமின் டி சத்து எலும்புகளை உறுதியாக்கும் , ஆரோக்கியத்துக்கும் உதவும். முக்கிய சத்துக்கள் அனைத்தும் உள்ள முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் காக்க உதவும். மஞ்சள்கரு உறுதிபடாமல் அளவாக அவித்து சாப்பிடுவது சத்துக்களை சிதையாமல் தரும்.