Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் நாசமாகிருச்சு… ஆறு போல் ஓடிய முட்டைகள்… டயர் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்..!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் டயர் வெடித்து 6 ஆயிரம் முட்டைகள் நடு ரோட்டில் உடைந்து ஆறு போல் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமகிரிப்பேட்டையிலிருந்து சரக்கு வேனில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது சரக்கு வேன் டயர் வெடித்து நடுரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த விபத்தில் வேனில் இருந்த 6 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமாகி முட்டைகள் முழுவதும் நடுரோட்டில் ஆறு போல் ஓடியது. இதனை பார்த்த பொது மக்கள் சிலர் உடைந்த முட்டைகளை  எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வேன் டிரைவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் ஆறாக ஓடிய முட்டைகளை தண்ணீர் பீய்ச்சி அடித்து சாலையை சுத்தம் செய்துள்ளனர்.

Categories

Tech |