Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி முட்டை தோசை இப்படி செய்து பாருங்க …சூப்பர் சுவை ….

ரோட்டுக்கடை முட்டை கார தோசை 

காரச் சட்னி – 1 கப்

தோசை மாவு – 2 கப்

முட்டை – 2

மிளகாய் – 1

வெங்காயம் – 1

மல்லித்தழை – சிறிதளவு

காரச்சட்னி செய்ய :

தக்காளி – 2

புளி –  சிறிது

வரமிளகாய் – 8

பூண்டு – 8 பற்கள்

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

கடுகு – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயத்தூள் –  சிறிது

முட்டை  தோசைக்கான பட முடிவுகள்

செய்முறை :

மிக்சியில் தக்காளி , வரமிளகாய் , பூண்டு , புளி , உப்பு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் கடாயில் நல்லெண்ணெய்  சேர்த்து கடுகு ,கறிவேப்பிலை , பெருங்காயத்தூள்  தாளித்து சட்னியில் கொட்டி கிளறினால் காரச்  சட்னி தயார்  . தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசையாக வார்த்து முட்டை , 1 ஸ்பூன் காரச்சட்னி ,  நறுக்கிய வெங்காயம் , மிளகாய் , மல்லித்தழை சேர்த்து தோசையின் மீது வார்த்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சூப்பரான முட்டை கார தோசை தயார் !!!

 

 

 

Categories

Tech |