பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில், பண்டிகைகள் மற்றும் தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு அனுப்ப வேண்டிய சுமார் 1 கோடி முட்டைகள் அனுப்ப முடியவில்லை எனவும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். முட்டைகளை அனுப்ப முடியாமல் இருப்பதால் தொடர்ந்து அதன் விலையும் குறைவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கோழிப்பண்ணையாளர்களும் மிகுந்த வருத்தம் தெரிவிக்கின்றனர்.