அதிக வெப்பத்தினால் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருப்பதால் கோழிகள் குறைவாகவே முட்டையிடுகின்றன என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை அடிக்கடி மாறி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்களை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நாட்டின் தேசிய கண்காணிப்பு அமைப்பு திங்கட்கிழமை சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலானது மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் மிகுந்த அழுத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. Hefei நகரில் வெப்பம் காரணமாக முட்டை உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வருத்தம் அளித்துள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் மட்டும் குளிரூட்டும் சாதனங்களை விவசாயிகள் நிறுவியுள்ளனர். இதனால் பல மாகாணங்களில் இருந்து முட்டை வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக Hefei நகரில் மட்டும் முட்டை ஒன்றின் விலையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் Hangzhou மற்றும் Hai’an நகரங்களில் முட்டை விலை உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் அந்நாட்டில் இதே வெப்பநிலை தொடர்ந்து நீடித்தால் முட்டை மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.