Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: குப்பையில் வீசப்பட்ட முட்டைகள்… வெளிவர தொடங்கிய கோழிக்குஞ்சுகள்… இயற்கை அளித்த வாழ்க்கை…!!

கொரோனா அச்சத்தினால் குப்பையில் வீசப்பட்ட முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிக்கன் மற்றும் முட்டையினால் பரவுகிறது என பீதி மக்களிடையே ஏற்பட்டு முட்டை மட்டும் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்தனர்.

இதனால் கடைகளில் முட்டை வாங்க ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முட்டைகளை குப்பையில் வீசியுள்ளனர் வியாபாரிகள். ஆனால் தற்போது குப்பையில் வீசப்பட்ட முட்டைகள் பொரித்து கோழி குஞ்சுகளாக மாறியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |