Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் : கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எம்.எல்.ஏ பரந்தாமன்..!!

புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எழும்பூர் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்..

தமிழக சட்ட பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் போது, எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்..

தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி.. 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளதால் இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த கட்டடம் 2018ல் தொடங்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்..

அமைச்சர் தா.மோ.அன்பரசன், புளியந்தோப்பு குடியிருப்பை ஆய்வு செய்ய ஐஐடி குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.. அவர்கள் அனுப்பும் அறிக்கையின் படி தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்..

Categories

Tech |