எகிப்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி (Mohamed Morsi) ஜூலையில் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டில் இருக்கும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து அத்துமீறி கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஒரு வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் வட சினாய் நகரில் சோதனை சாவடி ஒன்றின் மீது தாக்குதல் நடத்த முயன்றது.
அப்போது ராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குதலை முறியடித்து பதிலடி தாக்குதல் நடத்தியதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 2 அதிகாரிகள் உள்பட படையினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பயங்கரவாதிகள் எங்கேயாவது பதுங்கியிருக்கிறார்களா என்று தேடும் பணியும் நடந்து வருகிறது.