மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.
நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சுற்றுச் சூழலைக் காக்க மௌனம் கழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை பகிர்த்துள்ள சூர்யா பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க என்றும் தனது டுவிட்டரில் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு திருத்தம் செய்து வெளியிட்டுள்ள இ.ஐ.எ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நடிகரும் உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனருமான கார்த்தி கடுமையாக சாடியிருந்தார், அவர் வெளியிட்ட அறிக்கையில் இ.ஐ.எ வரைவு சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைத்திருப்பதாக தோன்றுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சூரியாவும் இ.ஐ.எ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.