Categories
அரசியல் தேசிய செய்திகள்

திமுகவிற்கு நேரடியாக சப்போர்ட் பண்ணலாமே….. சூர்யாவிற்கு எதிராக…. காயத்ரி ரகுராம் ட்விட்….!!

திமுகவிற்கு நேரடியாக சப்போர்ட் பண்ணலாமே என்று சூர்யாவின் கருத்துக்கு  காயத்ரி ரகுராம் எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.

 கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் வரைவு 2020 குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். யூடியூப் தல வாசிகளும், சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து பேசப்பேச இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கார்த்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய இந்த EIA 2020 திட்டத்தை இந்த கொரோனா சூழலில் அவசர அவசரமாக அரசு ஏன் நிறைவேற்ற வேண்டும்?

மக்களுடைய கருத்துக்களை பரிசளித்த பின்பு இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தான் நியாயம். அதுவரை நம்முடைய எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிப்போம் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கொண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யாவும் இந்த சட்டத்தை எதிர்த்து நடிகர் கார்த்தியின் ட்விட்டை மேற்கோள்காட்டி கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்,

“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிகவும் ஆபத்தானது. காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நம் மௌனம் கலைப்போம் என்று பதிவிட்டிருந்தார்” இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் மீதான விழிப்புணர்வு மக்களிடையே அதிகமாக கொண்டு செல்லப்பட்டது. தற்போது இவர்களது கருத்திற்கு எதிராக  பிக்பாஸ் பிரபலமான காயத்ரி ரகுராம் ட்விட்  ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதில்,

கண்டிப்பாக நாம் இதுபோல் திமுக சார்பில்  வரக்கூடிய பொய்களை நம்பாமல் இருக்க வேண்டும். மக்களிடையே இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக நேரடியாக திமுகவிற்கு சப்போர்ட் பண்ணலாமே. சரியாக விசாரிக்காமல் நீங்கள் சொல்வதுதான் சரி என்று கூறி மக்களை நம்ப வைப்பதற்கு,

https://twitter.com/gayathriraguram/status/1288347746135691266

இது போன்ற கட்சிகளுக்கு பின்னால் நின்று வேலை பார்க்க வேண்டாம் என்று சூர்யாவையும், EIA 2020 திட்டத்திற்கு ஆதரவு தருபவர்களையும் எதிர்க்கும் விதமாக கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு கீழ் கமெண்டில் பலரும் காயத்ரி ரகுராம் அவர்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Categories

Tech |