இந்த நிலையில், அந்நாட்டின் தெற்கு மாகாணமான ஹெல்மண்டில் (helmand) இருக்கும் நஹர் இ சரஜ் (Nahri Saraj) மாவட்டத்தில் சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த கார் ஓன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான் பயங்கரவாதிகளே இந்த சதி வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.