ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபர்கள் தப்பியோடிவிட்டதால் ஹெலிகாப்டர்கள் மூலம் ரோந்து மேற்கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.