அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்தவர்கள் மங்கல்தோயில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தேஸ்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. நீண்ட நேரமாக காருக்குள் சிக்கியிருந்த சடலத்தை உள்ளூர்வாசிகளின் உதவியோடு காவல் துறையினர் வெளியே எடுத்தனர். விபத்தில் 8 பேர் உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.