ஆப்கானிஸ்தான் மேற்கு கோர் மாகாணத்திலுள்ள சோதனைச்சாவடி வாயிலில் நுழைந்த தலிபான்கள் அங்குள்ள 10 போலீசாரை கொன்றதாக உள்ளூர் காவல் துறைத் தலைவர் ஃபக்ருதீன் தெரிவித்தார். இதற்கிடையே, கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் அலி ஷெர் என்ற மாவட்டத்தில் தாலிபான்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக, மாகாண காவல் துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் கூறியுள்ளார்..
இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் வாலி எக்லாஸ் என்பது குறிப்பிடத்தக்கது