Categories
உலக செய்திகள்

ஆய்வில் உறுதியான ஐன்ஸ்டீன் கோட்பாடு…. கருத்துளையின் பின்னால் இருந்து வெளிச்சம் வருகிறது…. முதன்முதலாக கண்டறிந்த விஞ்ஞானிகள்….!!

பூமியில் இருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கருத்துளையின் பின்னால் இருந்து ஒளி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரம்,கோள்கள் இறுதிகாலத்தில் கருந்துளையாக மாற்றமடைகிறது. குறிப்பாக சூரியனை விட மூன்று மடங்கு பெரிய அளவில் காணப்படும் நட்சத்திரங்கள் கருந்துளையாக மாறும் போது ஒரு சிறிய நகரத்தின் அளவிற்கு சுருங்கி விடும். விண்வெளியில் நட்சத்திரங்கள் கருந்துளையாக மாறும் போது அதன் ஈர்ப்பு விசை பல மடங்கு அதிகமாகி சுற்றியுள்ள பொருட்களை தனக்குள் இழுத்துக் கொள்ளும். இந்த கருத்துளைகள் நட்சத்திரங்களின் ஒளிரும் தன்மையை கூட தனக்குள் இழுத்துக் கொள்ளும். மேலும் இதன் அடத்தி மிக அதிகமாக இருக்கும்.

இதனிடையே முதல் முதலாக கடந்த 2019ஆம் ஆண்டு பூமியில் இருந்து சில கோடி ஒளியாண்டுகள் தூரத்திலிருந்த கருத்துளைகள் புகைப்படம் எடுக்கப்பட்டது .மேலும் இதில் வெற்றிடங்கள் காணப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஸ்டான்போர்ட் வானியல் ஆராய்ச்சியாளர் டான் வில்கின்ஸ் மற்றும் அவரது ஆராய்ச்சி குழு ஆய்வு மேற்கொண்டது பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில்  உள்ள ஒரு கருத்துளையின் பின் பகுதியில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டறிந்துள்ளார்.

மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் முதல் முதலாக கருத்துளையின் பின்பக்கத்திலிருந்து ஒளி வந்தது கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டில் ‘கருந்துளைக்குள் விழுங்கப்படும் நட்சத்திரம் மற்றும் கோள்கள் அதன் ஒளியை முற்றிலுமாக துளைக்குள் மறைத்து வைப்பதில்லை சில நேரங்களில் கருதுளைகள் பின்புறத்திலோ, மறுபக்கத்தில் தனது ஒளியை வெளிப்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.ஆனால் இப்போது தான் முதன் முதலாக கருத்துளையின் பின்னாலிருந்து ஒளி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |