தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்ல்லாமல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் காங்கிரசின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி தென்தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் விருதுநக,ர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.