இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது . இரு அணிகளுக்கும் இடையே மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் 3 வது டி 20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.
இதில் தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் 51 ரன்களும் , மலன் 76 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதையடுத்து இலங்கை அணி 181 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது ஆனால் இங்கிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணி 91 ரன்களுக்குள் இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.இதில் டேவிட் மலானுக்கு ஆட்ட நாயகன் விருதும் , தொடர் நாயகன் விருது சாம் கர்ரனுக்கும் வழங்கப்பட்டது .