தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அரசு வேலை என்பது பல பேரின் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாகும். ஆனால் அரசு வேலை கிடைப்பது என்பது எளிது கிடையாது. அதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. அதாவது பல்வேறு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆனால் ஒரு சிலர் அரசு வேலையை பண பலம் மற்றும் அதிகார பலம் வாயிலாக பெற்று விடலாம் என்று நினைத்து மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் தமிழ்நாடு காவல்துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பதிவு வெளியாகி வருகிறது. அந்த பதிவில், பல இடங்களில் அரசு வேலை பெற்று தருவதாக பலர் ஆசைவார்த்தை சொல்லி பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். அரசு வேலை என்பது முறையாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, தேர்வு (அல்லது) நேர்முக தேர்வு நடத்திய பின்புதான் தேர்வு செய்வார்கள். ஆனால் ஒருசிலர் அரசியலில் முக்கிய நபர்களை தனக்கு தெரியும், என்னால் அரசு வேலை வாங்கி தர முடியும், ஆனால் பணம் செலவாகும் என்று ஆசை வார்த்தைகளை பலரிடம் கூறி மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அந்த அடிப்படையில் ராமசந்திரன் பாலாம்பாள் தம்பதியினரின் மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு லோகேஷ் என்பவரை அணுகியுள்ளனர். அந்த லோகேஷ் பல தவணையில் அவர்களிடம் 14 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது. அவ்வாறு பணத்தை வாங்கி கொண்டு லோகேஷ் வேலை வாங்கி தரவில்லையாம். இந்நிலையில் லோகேஷ் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்று அறிந்த பாலாம்பாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுரைபடி மீதமுள்ள பணத்தை வாங்க கடந்த நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோவில் மேம்பாலத்திற்கு லோகேஷை வரவழைத்தார். இந்த நிலையில் காவல்துறையினர் லோகேஷை கைது செய்தனர். இதில் லோகேஷ் அரசு பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..