தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலை இல்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிசம்பர் 19ஆம் தேதி திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பிசப் ஹுபர் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு கல்வித் தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம்.
தனியார் துறையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சுய விவரக் குறிப்பு ஆகியவை கொண்டு வர வேண்டும். 10 மணிக்கு நாகர்கோவில் கோணம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.