கார்ட்டூன் கதாபாத்திரமான பாப்பாய் மீது அதிக ஆர்வம் கொண்ட ரஷ்யா இளைஞர் செய்த தவறான செயல் விபரீதத்தில் முடிந்தது.
உலகம் முழுவதும் அனைத்து குழந்தைகளும் விரும்பி பார்ப்பது கார்ட்டூன் சேனல் .இதில் வரும் கதாபாத்திரங்கள் விசித்திரமான செயல்கள் மற்றும் மேஜிக் மூலம் அனைத்தையும் குழந்தைகளும் ஈர்க்கப்படுகிறனர். அந்தவகையில் 90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த பிரபலமான கார்ட்டூன பாப்பாய்.இதில் அதிக ஆர்வம் கொண்ட ஆசிய இளைஞர் கிரில் என்பவர் பாப்பாய் கதாபாத்திரத்தில் அவர் வைத்துள்ள பைசப்ஸ் போல தனக்கும் வரவேண்டுமென்று ஆசை கொண்டுள்ளார்.
மேலும் உடற்பயிற்சிகள் மூலம் பைசப்ஸ்களை வளர்த்துக் கொள்ளாமல் பெட்ரோலியம் ஜல்லிகள் ஊசி போன்றவைகளை அவருடைய பைசெப்ஸ் பகுதிகளில் செலுத்திக் கொண்டுள்ளார். எனக்கும் பைசப்ஸ் பாபாயை போல் வந்விட்டது என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார் . அதன் பிறகு சிறிது காலத்திலேயே பைசெப்ஸ் உள்ள பகுதிகளில் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக செல்லாமல் நரம்புகள் அனைத்தும் இறுக்கமாகி கைகள் நாளடைவில் வீக்கம் அடைந்து .அவர் ஆசையாக வைத்துக்கொண்ட பைசெப்ஸ்களே அவருக்கு சிறிதும் நகர முடியாத அளவிற்கு உயிருக்கே ஆபத்தாக அமைந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து பைசெப்ஸ்களை அகற்றுவதற்கு போராடி வரும் நிலையில் ரத்தங்களை சுத்திகரிப்பதற்காக “டயாலிசிஸ்” செய்யவும் மேற்கொண்டுள்ளார். ஒரு வருடத்திற்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கிரிலின் போலி பைசெப்ஸ்கல் அகற்றுவதற்கான சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தன்னை போல் முட்டாள் தனமாக யாரும் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று ரஷ்ய இளைஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம் குழந்தைகள் அனைவரும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை ரசிப்பதோடு மட்டுமே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.