தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய “வாரிசு” படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பின் விஜய் மீண்டுமாக லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இப்படம் உருவாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் “லோகேஷ் கனகராஜ் போன்று இயக்குநராக விரும்புபவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன..?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது “எந்த அறிவுரையும் கேட்காதீர்கள். மேலும் நீங்கள் யாராக மாறவும் முயற்சி செய்யாதீர்கள். எந்த மாதிரியான சினிமாவை நாம் எடுக்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களது முதல் படம் தான் நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்தும். இதன் காரணமாக கதையில் கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.