இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணல்மேல்குடி பகுதியில் அபுதாஹீர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பவுசியா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுசியா பேகம் அதே பகுதியில் வசிக்கும் லியோ லாரன்ஸ் என்பவரிடம் ரூபாய் 18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து பவுசியா பேகத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி சரிவர லியோ லாரன்ஸ்க்கு செலுத்த முடியவில்லை. இதனால் லியோ லாரன்ஸ் கொடுத்த கடனை திருப்பி கேட்டு பவுசியா பேகத்திற்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த பவுசியா பேகம் தனது வீட்டில் மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவுசியா பேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லியோ லாரன்ஸை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.