Categories
உலக செய்திகள்

மனித உருவத்தில் இருக்கும் பொம்மை…. ஜோ பைடனை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்….!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மின்சார வாகனங்களது எதிர்காலம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், டெஸ்லா குறித்து குறிப்பிடாததற்கு எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் முன்பு இல்லாத வகையில் ஜிஎம் மற்றும் போர்டு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றன என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, “டி-யில் ல் தொடங்கி ஏ-யில் முடியும், இடையில் ஈஎஸ்எஸ் என வரும்” என்று நக்கலாக டெஸ்லாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “மனித உருவத்தில் இருக்கும், விரும்பப்படாத காலுறை அணிந்த பொம்மையாக ஜோ பைடன் இருக்கிறார்” என்று பதிவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் அமெரிக்க மக்களை முட்டாள்கள் போன்று ஜோ பைடன் நடத்தி வருகிறார் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.

Categories

Tech |