Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. இலங்கை அகதிகள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!

அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் 160 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முகாமை சேர்ந்த 3 பேர் கஞ்சா வைத்திருப்பதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் மீது பொய்வழக்கு போடுவதாக கூறி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சாமுவேல், தனி தாசில்தார் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் முகாமிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து பிரச்சனைகளை மனுவாக எழுதி கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் இலங்கை அகதிகள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |