Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் …. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு …. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

இலங்கை அணியின் இடது கை  வேகப்பந்து வீச்சாளரான உதனா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதனா சர்வதேச  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம்  என நம்புகிறேன் .அத்துடன் உள்ளூர் மற்றும் டி20 லீக் போட்டிகள் நிச்சயம் விளையாடுவேன் “என்று அவர் கூறியுள்ளார்.

இவர்  இலங்கை அணிக்காக  இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளும் 35 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து இந்த இரு வடிவிலான போட்டிகளிலும் தலா ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

Categories

Tech |