Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை டி20 அணிக்கு கேப்டனாக …. குசால் பெரேரா நியமனம் …!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இலங்கை அணி மூன்று  டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று  டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இதில் இலங்கை அணியின் டி20 போட்டியில் கேப்டனாக  குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இதற்கு முன்பாகவே  ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார் .

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஓவர் அணிக்கு  தசுன் ‌ஷனகா கேப்டனாக இருந்தார். தற்போது அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி,  குசால் பெரேராவை  கேப்டனாக நியமித்தனர். இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று  டி 20 போட்டிகள்  வருகின்ற 23, 24 மற்றும் 26 தேதிகளிலும் , 3 ஒருநாள் போட்டி 29, ஜூலை 1 மற்றும் 4 ம் தேதியில் நடைபெறுகிறது

Categories

Tech |