Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் படகு மூலம் 2 குழந்தைகள் உட்பட 19 இலங்கை தமிழர்கள் அகதிகளா தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முன்னதாகவே தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வந்த 20 பேரை அகதிகளாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திரிகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து அதிகாலை பைபர் படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரை மண்டபம் அகதிகள் முகாமில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |