இலங்கையில் வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என்று அதிபர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே தற்போது பதவியேற்றுள்ளார். அதன் பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே, ” இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில், அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை தடை விதித்து, அதன் மூலமாக உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எவரும், தகுந்த அனுமதி பெறாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.