Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் தொடரில்….வங்காளதேசம் வெற்றி பெற்று….தொடரை கைப்பற்றியது …!!!

இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே நடந்த  ,2 வது ஒருநாள் தொடரில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான  2 வது  ஒருநாள் போட்டி, டாக்காவில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி, 48.1 ஓவர்களில் 246 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பராக முஷ்பிகுர் ரஹிம், 10 பவுண்டரிகளை அடித்து விளாசி , 125 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 247 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 38 ஓவர்களில் 126 ரன்களை எடுத்திருந்தபோது ,மழையால் போட்டி பாதிக்கப்பட்டது.

இதனால் மழை நின்ற பிறகு , மீண்டும் போட்டி தொடங்கியது. ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலங்கை அணியின்  இலக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 103 ரன்கள் வித்தியாசத்தில், இலங்கையை வீழ்த்தி, வங்காளதேச அணி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .

Categories

Tech |