இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி விளையாட உள்ளது. இலங்கைக்கு எதிரான தொடர் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் முன்னணி வீரர்களான கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பங்கு பெற மாட்டார்கள். இதனால் இந்த இலங்கை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தொடரில் விளையாட உள்ள ,இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே இந்திய கிரிக்கெட் அணியின் 19 அண்டர் இளையோர் அணிக்கு பயிற்சியாளராகவும், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை ஆலோசகராகவும் ராகுல் டிராவிட் இருந்து வருகிறார் .