Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவு செயலர்…. கோரிக்கை வலியுறுத்தப்படும்…. இருநாட்டு பேச்சுவார்த்தை….!!

இந்திய வெளியுறவு செயலர் நான்கு நாள் அரசு முறை பயணமாக கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் அரசு முறை பயணமாக கடந்த  சனிக்கிழமை இலங்கைக்கு சென்றார். அங்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச போன்றோரை அவர் சந்தித்து பல்வேறு நிலைகளில் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றார். இந்த பயணத்தின் போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கையை அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்தியா-இலங்கை இடையே 1987-இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அரசியலமைப்பு சட்டத்தின் 13-வது பிரிவில் இதற்காக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

மேலும் கொரோனாவால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்கு இந்தியாவின் சார்பில் உதவிக்கரம் நீட்ட முடியுமா என்பதையும் இந்த பயணத்தின்போது ஷ்ரிங்லா ஆய்வு மேற்கொள்வார். இலங்கையின் வெளியுறவு செயலர் ஜெயநாத் கொலம்பகேயின் அழைப்பின்படி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டி மாவட்டம், திரிகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இருக்கின்றார். அப்போது இருநாட்டு நல்லுறவு விவகாரங்களை மறு ஆய்வு செய்தல், செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் மீளாய்வு மற்றும் கொரோனா தொடர்பான விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தின் மேற்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்தவும் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு சென்ற வியாழக்கிழமை அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளார். எனவே இலங்கை துறைமுகம் ஒன்றை இந்திய நிறுவனம் செயல்படுத்த அனுமதி அளிப்பது இதுவே முதல் முறையாகும். இவற்றில் அதானி நிறுவனம் 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கன்டெய்னர் முனைய திட்டத்தை செயல்படுத்துகிறது. மேலும் மேற்கு கன்டெய்னர் கட்டுமான திட்டம் குறித்தும் இந்திய வெளியுறவுச் செயலர் ஷீரிங்லா பேச்சுவார்த்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுச் செயலராக ஷீரிங்லா பதவியேற்ற பிறகு இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது கருதப்படுகிறது.

Categories

Tech |