இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை நிறைவேற்றியுள்ள தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை
இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதாவது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2009 ஆம் ஆண்டில் இறுதி கட்ட போரில் இலங்கை மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அப்போது அதிபராக இருந்த தற்போது பிரதமர் மகிந்த ராஜபாக்சே ஆட்சியில் 2012- 2014 ஆம் ஆண்டு மனித உரிமை கவுன்சிலில் அளித்த தீர்மானங்கள் 2 முறை தோல்வியை தழுவியது.
இதனை தொடர்ந்து தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் ஜெர்மனி கனடா போன்ற பல நாடுகள் இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் நடந்ததை குறித்து இதை விசாரித்தாகவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது அதிலிருந்து இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சீனா பாகிஸ்தான் கியூபா ரஷ்ய போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் 22 நாடுகள் வாக்களித்துள்ளதால் இலங்கைக்கு எதிரான இனப்படுகொலையின் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 11 நாடுகள் இலங்கை தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.