இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷவர்தன் நேற்று சந்தித்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷவர்தன் நேற்று சந்தித்து பேசினார்.அப்போது இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷவர்தன் கூறியதாவது, “இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவின் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே இவரை நான் நேற்று சந்தித்து பேசினேன்.
இதில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும். இதனை தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்க உள்ளேன்” என்று கூறினார். மேலும் ஹர்ஷவர்தன் தமிழர்களின் பெரும்பான்மையான வடக்கு மாகாணம் பலாலிக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட விமான நிலையத்தை பார்வையிட்டார்.