Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வருவாய் அலுவலர் அலுவலகம்” இழப்பீடு தொகை வழங்கக்கோரி…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் தலைமையில், விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றைகொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சில இடங்களில் மிகக் குறைந்த அளவில் இழப்பீடு கொடுக்கப்படுகிறது என்றும் ஒரு சில இடங்களில் இன்னும் முழுமையாக அளவில் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மரம், ஆழ்துளை கிணறு மற்றும் கட்டிடத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை என்றும் சந்தை மதிப்பீட்டுக்குரிய தொகையை கணக்கிட்டு 3 மடங்கு வழங்க கோரியும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |