பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தான் எழுதி வெளியிடத் தயாராக இருக்கும் தனது புத்தகத்துக்கு “Spare” என்று பெயர் வைத்திருக்கிறார்.
பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது புத்தகத்துக்கு “Spare” என்று பெயர் வைப்பதற்கான காரணம். அவரது அண்ணனாகிய இளவரசர் வில்லியம் மீதான பொறாமை என்று ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளரான Andrew Bolt கூறுகிறார். மேலும் இது குறித்து Andrew Bolt விரிவாக கூறியதாவது, “இளவரசன் ஹரி தனது புத்தகத்துக்கு ’Spare’ என பெயர் வைத்துள்ளது ஏன் என்றால், தான் ஒரு Spare ஆக, அதாவது, அவசியமான ஒரு பொருள் இல்லாதபட்சத்தில், அதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு மாற்றுபொருளாக கருதப்படுவதால்.
இன்னமும் வெளிப்படையாக சொன்னால், இளவரசர் வில்லியமுக்கு விபத்து ஏதாவது நிகழ்ந்து அவரால் மன்னராக முடியாமல் போய்விட்டது என்றால், அவருக்கு பதிலாக தனக்கு சில பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என ஹரி கருதுகின்றார் என்பது அதன் பொருளாகும். ஆனால், அப்படியே துரதிர்ஷ்டவசமாக இளவரசர் வில்லியமுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கூட, மன்னர் இருக்கையில் அமர, ஹரிக்கு முன்னால், இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகளான குட்டி இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோர் இருக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.