இளவரசி டயானா சிலையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் மாளிகையில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மகன்களான இளவரசர்கள் வில்லியம் , ஹரி இருவரும் இணைந்து அவரின் நினைவாக உருவச் சிலை ஒன்றை திறந்து வைத்தனர். இந்நிலையில் இளவரசியின் சிலையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கென்சிங்டன் மாளிகையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதன்பின் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் ஆர்வத்துடன் சிலையை பார்க்க மக்கள் குவிந்தனர்.
இந்த சிலையை நேரில் பார்த்த மக்கள் இரண்டு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் இளவரசி டயானா சிலை அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும், மற்றவர்கள் இந்த சிலையை பார்ப்பதற்கு டயானா போல் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இந்த சிலையை பார்ப்பதற்கு முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.