Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவசமாக வழங்குவதற்கு…. தொடங்கி வைத்த முதல்வர்….!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்களை இலவசமாக வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் வாரியாக பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் வருகின்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் கடந்த சில தினங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பெரும்பாலானோர் இலவச பாடப் புத்தகங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இதனால் அந்தப் பள்ளிகளில் மாணவ- மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. ஆனாலும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மாவட்டம் முழுவதும் பள்ளி வாரியாக நடைபெற்றது. இதேபோன்று தனியார் பள்ளிகளிலும் பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |