தஞ்சாவூரிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மூதாட்டி மறுபடியும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வீடியோவில் நடந்துனர், காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார்.
அதற்கு மூதாட்டி “காசு ஓசி என நான் போகவில்லை. எதற்காக தம்பி இப்படி கோபமாக பேசுகிறாய். நான் மாலை போட்டுள்ளேன் என பரிதாபமாக கூறினார். இந்த காட்சிகளை அங்கிருந்த சகப் பயணி தன் செல்போனில் படம் பிடித்து உள்ளார். இந்த காட்சிகள் வெளியானதை அடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர், மானங்கோரையை சேர்ந்த அந்த நடத்துனர் ரமேஷ்குமாரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்..