Categories
மற்றவை விளையாட்டு

இந்தியாவுக்கு பெருமை…. தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை..!!

தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Image result for Elavenil Valarivan

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்கப்பதக்கம் வென்றார். இளவேனில் வளறரிவன் இதுவரையில் 3 தங்கப்பதக்கமும், 1 வெள்ளியும் வென்றுள்ளார்.சமீபத்தில்  இந்திய வீராங்கனை பி.வி சிந்து உலக சம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |