தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், பிரேசிலில் நடைபெற்ற உலககோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை க்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். சர்வதேசப் போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்களைப் பெற்று தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறேன்!
பிரேசிலில் நடைபெற்ற உலககோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை @elavalarivan-க்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்💐
சர்வதேசப் போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்களைப் பெற்று தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறேன்! https://t.co/sSAuDKiHwF
— M.K.Stalin (@mkstalin) August 29, 2019